by Staff Writer 18-05-2022 | 6:55 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக படகு மூலம் வௌிநாடு செல்ல முற்பட்ட 8 பேர் இன்று காலை புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகு மூலம் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்திற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட இவர்கள் கருவெலகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவை சேர்ந்த 7 ஆண்களும் பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகு மூலம் கடலுக்கு சென்று, மீண்டும் புத்தளம் கடற்கரைக்கு திரும்பிய நிலையில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.