இன்று(18) எரிவாயு வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

இன்று(18) எரிவாயு வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

இன்று(18) எரிவாயு வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

எழுத்தாளர் Staff Writer

18 May, 2022 | 10:04 am

Colombo (News 1st) விநியோக நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்று(18) எரிவாயுவிற்கான வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கட்டணம் செலுத்தப்பட்ட 2,800 மெட்ரிக் தொன் எரிவாயு தொகையை தரையிறக்கும் பணிகள் நேற்று(17) ஆரம்பமானதாகவும் அதன் காரணமாக இன்று(18) முதல் நாளாந்தம் 80,000 சிலிண்டர்களை சந்தைகளுக்கு விநியோகிக்க முடியும் எனவும் லிட்ரோ நிறுவனம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்