ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் 21-க்கு ஆதரவு

ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் 21 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவிப்பு

by Staff Writer 17-05-2022 | 8:12 PM
Colombo (News 1st) 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் பட்சத்தில், தாம் அதற்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதி தலைவர் சட்டத்தரணி N.M.ஷஹீட் தெரிவித்துள்ளார். 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் 21 ஆவது திருத்தத்தில் காணப்படுமாயின், அதற்கு தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதி தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார். 21 ஆவது திருத்தத்தின் மூலம் பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படுமாயின், அதற்கு ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.