சஜித்துடன் தொழிலாளர் காங்கிரஸ் கலந்துரையாடல்

சஜித் பிரேமதாசவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துரையாடல்

by Staff Writer 17-05-2022 | 6:43 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பொருளாதாரத்தை மீட்பதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். பிரதி சபாநாயகர் தெரிவின் போது ஐக்கிய மக்கள் சக்தி பிரேரிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.