வசீம் தாஜுதீனுக்கு நீதி கோரி கண்டனப் பேரணி

வசீம் தாஜுதீனுக்கு நீதி கோரி கண்டனப் பேரணி

எழுத்தாளர் Staff Writer

17 May, 2022 | 8:29 pm

Colombo (News 1st) கோட்டாகோகம போராட்டக்களத்தின் 39 ஆவது நாள் இன்றாகும்.

வெசாக் பூரணையை முன்னிட்டு நேற்றிரவு சமய அனுஸ்டானங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இதனிடையே, அறவழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோட்டாகோகம கிளையில் இன்று (17) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலைஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, கலைஞர்கள் போராட்டக்களத்திற்கு வருகை தந்தனர்.

இதேவேளை, முன்னாள் ரக்பீ வீரர் வசீம் தாஜூதீனின் பத்தாவது ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு, அவரின் உறவினர்களும் நண்பர்களும் போராட்டக்களத்திலுள்ள அங்கவீனமான இராணுவ வீரர்களுக்கு மதிய போசனத்தை வழங்கினர்.

இதனிடையே, வசீம் தாஜுதீன் உயிரிழப்பிற்கு நீதி கோரி இன்று கண்டனப் பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்