பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒத்துழைப்பு வழங்க தேசிய காங்கிரஸ் தீர்மானம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒத்துழைப்பு வழங்க தேசிய காங்கிரஸ் தீர்மானம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒத்துழைப்பு வழங்க தேசிய காங்கிரஸ் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

17 May, 2022 | 6:32 pm

Colombo (News 1st)  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒத்துழைப்பு வழங்க தேசிய காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தேசிய காங்கிரஸின் சட்டம் மற்றும் கொள்கை விவகார ஆலோசகர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் உயர் பீட கூட்டம் கட்சியின் தலைவர் A.L.M. அதாவுல்லாஹ் தலைமையில் நேற்று (16) நடைபெற்றது.

இதன்போது, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக சட்டத்தரணி மர்சூம் மௌலானா குறிப்பிட்டார்.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு கட்சி வேறுபாடுகளைக் களைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்றிட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க உயர் பீடம் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுயாதீனமாக செயற்படுகின்ற 10 கட்சிகளுடன் இணைந்து தேசிய காங்கிரஸின் கொள்கைகளுக்கு அமைவாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக தேசிய காங்கிரஸின் சட்டம் மற்றும் கொள்கை விவகார ஆலோசகர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்