நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்

நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்

by Staff Writer 17-05-2022 | 6:43 AM
Colombo (News 1st) 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று(17) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். ஓமானிலிருந்து இந்த எரிவாயு தொகை நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.