கியூபா மீதான பொருளாதார தடைகளை தளர்த்த அமெரிக்கா தீர்மானம்

கியூபா மீதான பொருளாதார தடைகளை தளர்த்த அமெரிக்கா தீர்மானம்

கியூபா மீதான பொருளாதார தடைகளை தளர்த்த அமெரிக்கா தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

17 May, 2022 | 12:38 pm

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால்(Donald Trump)  கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான பொருளாதார தடைகளை தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பைடன் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்பத்தினருக்கு பணம் அனுப்புதல் மற்றும் கியூபாவிற்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் கீழ், கியூப மக்களுக்கான அமெரிக்க விசா பெறுவதும் துரிதப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்