ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம்

ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம்

by Chandrasekaram Chandravadani 16-05-2022 | 5:21 PM
Colombo (News 1st) இன்றைய தினம்(16) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றிரவு(16) 11 மணி முதல் நாளை(17) அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இன்றிரவு(16), 08 மணி முதல் நாளை(17) அதிகாலை 05 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரவு இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.