தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

16 May, 2022 | 4:18 pm

Colombo (News 1st) தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தேவையான விடயங்களை கருத்திற்கொண்டு, தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுக்கு பதவிகளை பெற்றுக்கொள்ளாமல் பாராளுமன்ற செயன்முறையின் ஊடாக பூரண ஆதரவை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இன்று(16) இடம்பெற்ற பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் சாதகமாக்கிக்கொள்ள மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிப்படை கொள்கைகளுக்கு புறம்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் செயற்பாடுகள் எடுக்கப்பட்டால் குறித்த ஆதரவை நிபந்தனையின்றி இடைநிறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்