அமைச்சு பதவி வேண்டாம், நாட்டின் நெருக்கடியை தீர்க்க ஆதரவளிப்போம் – உதய கம்மன்பில

அமைச்சு பதவி வேண்டாம், நாட்டின் நெருக்கடியை தீர்க்க ஆதரவளிப்போம் – உதய கம்மன்பில

எழுத்தாளர் Staff Writer

16 May, 2022 | 2:52 pm

Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்திலிருந்து சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கிடையில் இன்று(16) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அமைச்சு பொறுப்புகளை ஏற்காமல், பிரதமரால் நாட்டின் நெருக்கடிகளை தீர்ப்பதற்காக அமைக்கப்படும் 15 குழுக்களில் அங்கம் வகித்து நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில, பேராசிரியர் விஜேதாஸ ராஜபக்ஸ, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்