வாகன விபத்தில் அன்ட்ரூ சைமன்ட்ஸ் உயிரிழப்பு

வாகன விபத்தில் அன்ட்ரூ சைமன்ட்ஸ் உயிரிழப்பு

by Staff Writer 15-05-2022 | 4:20 PM
Colombo (News 1st) உலக கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய செய்தியொன்று இன்று(15) பதிவானது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அன்ட்ரூ சைமன்ட்ஸ்(Andrew Symonds) வாகன விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தார். இரு பிள்ளைகளின் தந்தையான 46 வயதான அன்ட்ரூ சைமன்ட்ஸ் வாகன விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டன.