இன்று(15) எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது

இன்று(15) எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது - இலங்கை பெட்ரோலிய மொத்த களஞ்சியசாலை கூட்டுத்தாபனம்

by Staff Writer 15-05-2022 | 1:59 PM
Colombo (News 1st) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று(15) எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய மொத்த களஞ்சியசாலை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. Colombo (News 1st) வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் இன்று(15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர், மேஜர் ஜெனரல் R.M.W. சொய்சா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காத்திருக்கின்றனர். நேற்றிரவு(14) முதல் சில பகுதிகளில் மக்கள் வரிசையில் நிற்பதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதனிடையே 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நேற்றிரவு(14) நாட்டை வந்தடைந்தது. இந்திய கடன் உதவியுடன் கீழ் முற்பதிவு செய்யப்பட்ட குறித்த கப்பலிலிருந்து டீசலை இறக்கும் பணிகள் இன்று(15) ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.