கஞ்சி பரிமாறி வலி சுமந்த கதை பகிரும் மக்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கஞ்சி பரிமாறி வலி சுமந்த கதை பகிரும் மக்கள்

by Bella Dalima 14-05-2022 | 7:40 PM
Colombo (News 1st) 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாவது நாளை முன்னிட்டு நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினை​வேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு சத்துருகொண்டானில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் சத்துருகொண்டான் நினைவுத்தூபிக்கு முன்பாக நிகழ்வேந்தல் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி களுவாஞ்சிக்குடியில் வழங்கி வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முகமாக துண்டுப்பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இன்று யாழ். குருநகரிலும் முன்னெடுக்கப்பட்டது. குருநகரில் அமைந்துள்ள கர்த்தர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டின் பின்னர் அப்பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகளும் கலந்துகொண்டிருந்தார். ''கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்" என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.