மன்னாரில் காணாமல்போயிருந்த மீனவர் சடலமாக மீட்பு

மன்னாரில் காணாமல்போயிருந்த மீனவர் சடலமாக மீட்பு

மன்னாரில் காணாமல்போயிருந்த மீனவர் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

14 May, 2022 | 3:16 pm

Colombo (News 1st) மன்னார் – செளத்பார் பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்ற நிலையில் காணாமற்போன மீனவர் இன்று(14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எமில்நகரை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 29 வயதான மீனவரே நேற்று(13) காலை மீன்பிடிக்கச் சென்று காணாமற்போயிருந்தார்.

களப்பில் இறங்கி மீன்பிடிக்கச் சென்ற குறித்த இளைஞரே நீரில் மூழ்கி காணாமற்போயிருந்தார்.

உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து நேற்று முதல் குறித்த மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையிலேயே, இன்று(14)காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்