பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக பாதுகாப்பு 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக பாதுகாப்பு 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக பாதுகாப்பு 

எழுத்தாளர் Bella Dalima

14 May, 2022 | 9:02 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறு பொலிஸ் தலைமையகத்தினால் அறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக 06 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பும் மேலதிகமாக 04 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வழங்கப்படவுள்ளனர்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக T56 ரக இரண்டு துப்பாக்கிகளையும் பாதுகாப்பு உத்தியோகத்தர் குழுவிற்கு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்