தகுதியான ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்: டக்ளஸ் தேவானந்தா கருத்து 

தகுதியான ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்: டக்ளஸ் தேவானந்தா கருத்து 

தகுதியான ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்: டக்ளஸ் தேவானந்தா கருத்து 

எழுத்தாளர் Bella Dalima

14 May, 2022 | 8:49 pm

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நிறைவடைந்துள்ளது.

இதன்போது, பிரதமரின் நியமனத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏகமனதாக அங்கீகரித்து அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா பதில் வழங்கினார்.

தற்போதைய நிலையில் தகுதியான ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கான ஆதரவை வழங்குவதாகவும் டகள்ஸ் தேவானந்தா தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்