சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்கும் இந்தியா

சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்கும் இந்தியா

by Staff Writer 14-05-2022 | 2:52 PM
Colombo (News 1st) சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக  “த ஹிந்து” செய்தி வெளியிட்டுள்ளது. மிலிந்த மொரகொட, இந்திய உர திணைக்களத்தின் செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை சிறுபோக செய்கைக்கு வழங்கும் இந்தியாவின் தீர்மானத்திற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். நேபாளத்திற்கு அடுத்ததாக இந்தியா உரம் வழங்கும் இரண்டாவது நாடு இலங்கை எனவும் த ஹிந்து  செய்தி வௌியிட்டுள்ளது.