அமைச்சர்கள் நால்வர் நியமனம்  

அமைச்சர்கள் நால்வர் நியமனம்  

அமைச்சர்கள் நால்வர் நியமனம்  

எழுத்தாளர் Bella Dalima

14 May, 2022 | 8:06 pm

Colombo (News 1st) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நான்கு பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அமைச்சரவை முழுமையாக நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய நடவடிக்கைகளை சட்ட ரீதியாகவும் வலுவாகவும் முன்னெடுத்துச்செல்வதற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, வௌிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸூம்
அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி மாளிகையில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்