பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க SLPP தீர்மானம்

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கவும் அரசின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கவும் SLPP தீர்மானம்

by Staff Writer 13-05-2022 | 7:13 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் தமது கட்சி சுயாதீனமாக இயங்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். இருப்பினும், பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் முன்வைக்கின்ற வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறினார்.