சட்ட ஒழுங்கு மீறல் தொடர்பில் தகவல் வழங்க முடியும்

சட்ட ஒழுங்கு மீறல் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் 

by Staff Writer 13-05-2022 | 4:24 PM
Colombo (News 1st) வன்முறைக் குழுக்கள் நாட்டில் முன்னெடுக்கும் சட்டம் ஒழுங்கை மீறும் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை வழங்க பாதுகாப்பு அமைச்சினால் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் 076 73 93 977 அல்லது 0112 44 11 46 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி, அது தொடர்பான தகவல்களை வழங்க முடியுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே, 118 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கும் அழைத்து தகவல்களை வழங்க முடியுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள், கொள்ளைகள், தாக்குதல்கள் மற்றும் பொது அல்லது தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பான தகவல்களை குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.