கோபால் பாக்லே -  ரணில் விக்ரமசிங்க சந்திப்பு 

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே - பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு 

by Staff Writer 13-05-2022 | 3:42 PM
Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இன்று கடமைகளை பொறுப்பேற்ற புதிய பிரதமருக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நலன் கருதி, ஜனநாயக செயற்பாடுகளின் ஊடாக பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். இதேவேளை, இந்தியாவுடன் நெருங்கி செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட புது டெல்லி எதிர்பார்த்துள்ளதாகவும் மக்களின் நலன் தொடர்பில் கரிசனையுடன் உள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.