வட கொரியாவில் முதல் கொரோனா மரணம் பதிவு 

வட கொரியாவில் முதல் கொரோனா மரணம் பதிவு 

வட கொரியாவில் முதல் கொரோனா மரணம் பதிவு 

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2022 | 5:01 pm

Colombo (News 1st) கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக வட கொரியா முதன்முதலாக அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவியுள்ளதாக வட கொரியா நேற்றைய தினமே முதன்முதலாக அறிவித்திருந்ததுடன், இன்று முதல் மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் 1,87,000 பேர் காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட கொரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினமே முதன்முதலாக அறிவிக்கப்பட்ட போதிலும், இதற்கு முன்னரே நாட்டில் வைரஸ் பரவியிருக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவின் தலைநகர் பியோங்யோங்கில் பெருமளவானோர் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வருடம் AstraZeneca, Sinopharm தடுப்பூசிகளை வழங்குவதற்கு உலக நாடுகள் முன்வந்தாலும், வட கொரியா அதனை நிராகரித்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்