பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடமைகளை பொறுப்பேற்றார் 

by Bella Dalima 13-05-2022 | 11:30 AM
Colombo (News 1st) ரணில் விக்ரமசிங்க பிரதமர் அலுவலகத்தில் இன்று (13) கடமைகளை பொறுப்பேற்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரசிங்க நேற்று (12) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ரணில் விக்ரமசிங்க ஆறாவது தடவையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.