நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 May, 2022 | 4:51 pm

Colombo (News 1st)  நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (13) பிற்பகல் முதல் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்தது.

இதற்கிணங்க, களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரள மற்றும் பஸ்பாகே கோரள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூபிட்டிய, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல மற்றும் பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல, கலவான, இம்புல்பே, குருவிட்ட, பலாங்கொட மற்றும் கிரியெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எஹலியகொட, அயமக மற்றும் எலபாத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்கான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்