பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பெயர்கள்...

பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவில்லை - மைத்திரிபால சிறிசேன

by Staff Writer 12-05-2022 | 11:23 AM
Colombo (News 1st) நேற்றைய(11) கலந்துரையாடலில், புதிய பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர்கள் இதுவரை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து சுயாதீனமாக செயற்படுவதற்குத் தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளை கொண்ட குழுவுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(11) கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதன்போது முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஸ ஆகியோரது பெயர்களை பிரதமர் பதவிக்காக முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டது.