ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 May, 2022 | 7:30 pm

Colombo (News 1st) இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க தூதுவர் Julie Chung வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது நியமனமும், அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை விரைவாக உருவாக்குவதும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதற்படி என Julie Chung ட்வீட் செய்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு தற்போது தேவையான தீர்வுகளை நீண்ட கால அடிப்படையில் பெற்றுக் கொடுக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் பெறுமதியான நகர்வுகளை முன்னெடுக்கவும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்