பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவில்லை – மைத்திரிபால சிறிசேன

பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவில்லை – மைத்திரிபால சிறிசேன

பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவில்லை – மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Staff Writer

12 May, 2022 | 11:23 am

Colombo (News 1st) நேற்றைய(11) கலந்துரையாடலில், புதிய பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர்கள் இதுவரை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து சுயாதீனமாக செயற்படுவதற்குத் தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளை கொண்ட குழுவுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(11) கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஸ ஆகியோரது பெயர்களை பிரதமர் பதவிக்காக முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்