by Staff Writer 12-05-2022 | 7:16 AM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று(12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கிழக்கு, தென், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று(12) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வட மேல் மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய பாடசாலைகளை மாத்திரம் இன்று(12) திறக்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, வட மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் இன்று(12) நண்பகல் 12 மணி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று(12) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாணக் கல்வி பணிப்பாளர் நேற்று(11) அறிவித்திருந்தார்.