புதிய பிரதமரை நியமித்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு 

by Staff Writer 11-05-2022 | 10:25 PM
Colombo (News 1st) புதிய பிரதமரை நியமித்து, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். இன்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போது ஜனாதிபதி இந்த கருத்துக்களை வௌியிட்டார்.