ஊரடங்கு சட்டம் நாளை தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்

ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு அமுல் 

by Bella Dalima 11-05-2022 | 9:54 PM
Colombo (News 1st) கடந்த திங்கட்கிழமை (09) முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை நண்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மீண்டும்  அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.