by Staff Writer 11-05-2022 | 7:51 PM
Colombo (News 1st) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நாடளாவிய ரீதியான எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகல் மீண்டும் ஆரம்பமானதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதாகவும், அடையாளங்காணப்பட்ட பிரதேசங்களுக்கான எரிபொருள் விநியோகம் தற்போது இடம்பெறுவதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்தது.
பொலிஸ் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாகவும் போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
எரிபொருள் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியது.
எனினும், இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் CEYPETCO மற்றும் IOC எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.