நீண்ட யுத்தத்திற்கு தயாராகும் புதின் – அமெரிக்க உளவுப் பிரிவு

நீண்ட யுத்தத்திற்கு தயாராகும் புதின் – அமெரிக்க உளவுப் பிரிவு

நீண்ட யுத்தத்திற்கு தயாராகும் புதின் – அமெரிக்க உளவுப் பிரிவு

எழுத்தாளர் Staff Writer

11 May, 2022 | 7:57 am

Colombo (News 1st) உக்ரைன் மீதான யுத்தத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது மிக நீண்ட யுத்தத்தை நடத்துவதற்கான முயற்சிகளை புட்டின் மேற்கொண்டு வருவதாகவும் குறித்த நெருக்கடியைத் தீர்வின்றி தொடர்வதற்கு முயற்சிப்பதாகவும் அமெரிக்க உளவுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியான தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் ரஷ்யா, உக்ரைனை முழுவதுமாக கைப்பற்றும் நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனின் தலைநகரில் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டதன் பின்னர் மீண்டும்
டொன்பாஸ் பிராந்தியம் தொடர்பில் மொஸ்கோ கரிசனை கொண்டுள்ளதாகவும் சர்வதேச அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பணவீக்கம், உணவுப் பற்றாக்குறை, எரிசக்தி விலையதிகரிப்பு காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு உக்ரைனுக்கு குறைவடையலாம் என ரஷ்ய ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவின் தலைமை அதிகாரி Avril Haines தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்