32ஆவது நாளாகவும் தொடரும் காலி முகத்திடல் போராட்டம்

32ஆவது நாளாகவும் தொடரும் காலி முகத்திடல் போராட்டம்

32ஆவது நாளாகவும் தொடரும் காலி முகத்திடல் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

10 May, 2022 | 7:33 am

Colombo (News 1st) ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக இன்று(10), 32ஆவது நாளாகவும் அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து கட்சி பேதமின்றி மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு சட்டத்தை பொருட்படுத்தாது, நேற்றிரவு(09) ஏராளமானோர் போராட்ட இடத்திற்கு வருகை தந்து ஆதரவளித்துள்ளனர்.

வழமையை விட அதிகமானோர் இன்று(10) அதிகாலை வேளையிலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்