மோதல்களில் 7 பேர் உயிரிழப்பு, 249 பேர் காயம் 

நாட்டில் இடம்பெற்ற மோதல்களில் 7 பேர் உயிரிழப்பு, 249 பேர் காயம் 

by Bella Dalima 10-05-2022 | 4:29 PM
Colombo (News 1st) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 249 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்தது. மோதல்களில் காயமடைந்த 232 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இவர்களில் ஐவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.