by Bella Dalima 10-05-2022 | 3:43 PM
Colombo (News 1st) திருகோணமலை கடற்படை தளத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இருப்பதாகக் கருதி, கடற்படை தளத்திற்கு முன்பாக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடற்படை தளத்திற்கு செல்லும் வீதிகள், அதனை சூழவுள்ள கடற்பரப்பு ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.