லங்கா IOC எரிபொருள் விநியோக கட்டுப்பாடு

லங்கா IOC எரிபொருள் விநியோக கட்டுப்பாடு

by Staff Writer 08-05-2022 | 9:01 PM
Colombo (News 1st) வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை லங்கா IOC நிறுவனம் நாளை(09) முதல் வரையறுத்துள்ளது. அதற்கமைய, ⭕ மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாவிற்கும் ⭕ முச்சக்கர வண்டிகளுக்கு 3,000 ரூபாவிற்கும் ⭕ கார், வேன், ஜீப் வண்டிகளுக்கு 8,000 ரூபாவிற்கும் எரிபொருளை விநியோகிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், பஸ், லொரிகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.