பிரதான ரயில் மார்க்க ரயில் ​போக்குவரத்தில் தாமதம்

பிரதான ரயில் மார்க்க ரயில் ​போக்குவரத்தில் தாமதம்

by Staff Writer 08-05-2022 | 3:36 PM
Colombo (News 1st) பிரதான ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி ரயிலொன்று களனி ரயில் நிலையத்திற்கு அருகில் இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். இன்று(08) காலை 11.50 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து குறித்த ரயில் பயணத்தை ஆரம்பித்துள்ளது. ரயிலில் இயந்திரக் கோளாறினை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.