ஜயஶ்ரீ மகா போதி வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர்

ஜயஶ்ரீ மகா போதி வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர்

by Staff Writer 08-05-2022 | 2:44 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஸ இன்று(08) காலை வரலாற்று சிறப்புமிக்க ஜயஶ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். ருவான்வெலிசாய வழிபாடுகளிலும் ஈடுபட்ட பிரதமர், ருவான்வெலிசாய மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்பின்னர் மிரிசவெட்டிய விகாரைக்குச் சென்ற பிரதமர் அங்கு கலாநிதி ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக நாயக்க தேரரிடமும் ஆசி பெற்றுக்கொண்டார்.