சட்டவிரோத மணல் கடத்தல்; மூவர் கைது

சட்டவிரோத மணல் கடத்தல்; மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

08 May, 2022 | 5:17 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி, களஞ்சியப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் இன்று(08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் – கைதடி பிரதான வீதியின் கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை இன்று(08) முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அனுமதியற்ற முறையில் மணல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 டிப்பர் வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பின்னர் சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்த போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருகோணமலை கடற்கரை மணலை சட்டவிரோதமாக அகழ்ந்து, கோப்பாய் பகுதிக்கு கொண்டுவந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கைப்பற்றப்பட்ட 4 டிப்பர் வாகனங்களுடன் சந்தேகநபர்களை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நாளைய தினம்(09) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்