இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பரிந்துரைத்துள்ள தேசிய வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் கூட்டணி ஆதரவு

by Staff Writer 07-05-2022 | 5:06 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) முன்வைத்த ஆலோசனைக் கோவையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கி, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த ஆலோசனைக் கோவையை பரிசீலித்த ஐக்கிய மக்கள் கூட்டணி, அதற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் இராஜினாமாவும் இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது, தற்போதைய தேசிய நெருக்கடியை தீர்ப்பதற்கான அடிப்படைத் தேவையாகக் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.