ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

07 May, 2022 | 7:41 pm

Colombo (News 1st) ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.

எனினும், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சி கூடி தீர்மானம் எடுக்க வேண்டும் என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அதற்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பிலான விளக்கம் தமக்கு வழங்கப்பட்ட பின்னரே அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என அவர் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்