மஹபாகே சந்தியில் மக்கள் ஆர்ப்பாட்டம் 

கொழும்பு - நீர்கொழும்பு வீதியின் மஹபாகே சந்தியில் மக்கள் ஆர்ப்பாட்டம் 

by Staff Writer 07-05-2022 | 10:44 AM
Colombo (News 1st) எரிவாயு பெற்றுத்தருமாறு கோரி கொழும்பு - நீர்கொழும்பு வீதியின் மஹபாகே சந்தியில் இன்று காலை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் வாகனப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. எரிவாயுவை பெற்றுக்கொள்ள பல நாட்களாக மக்கள் காத்திருப்பதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் கூறினர். சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டினால் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் இன்றும் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.