இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9% வீழ்ச்சி

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9% வீழ்ச்சி

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9% வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

07 May, 2022 | 4:05 pm

Colombo (News 1st) இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் குறைவடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

9% வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சபை கூறியுள்ளது.

கடந்த வருடம் முதல் காலாண்டில் 69.8 மில்லியன் கிலோகிராம் தேயிலை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வருடம் குறித்த காலப்பகுதியில் 63 மில்லியன் கிலோகிராம் தேயிலையே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

உரப்பிரச்சினை, ரஷ்ய – உக்ரைன் மோதல் மற்றும் காலநிலை மாற்றம் என்பன தேயிலை ஏற்றுமதியில் தாக்கம் செலுத்தியுள்ளதாக சபை கூறியுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது வழமையான ஏற்றுமதிக்கு திரும்பியுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடத்தில் தேயிலை ஏற்றுமதியூடாக1.3 பில்லியன் ரூபா வருமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்