சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் பொய்யானது

ஹர்த்தாலில் கலந்துகொண்டால் சம்பளம் வழங்கப்பட மாட்டாது எனும் தகவல் பொய்யானது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

by Bella Dalima 06-05-2022 | 4:04 PM
Colombo (News 1st) ஹர்த்தாலில் கலந்துகொண்டுள்ள அரசாங்க ஊழியர்களின் மே மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாதென ஜனாதிபதி ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.