குருநகரில் சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுடன் நால்வர் கைது

குருநகரில் சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுடன் நால்வர் கைது

குருநகரில் சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுடன் நால்வர் கைது

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2022 | 4:50 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – குருநகரில் சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநகரை சேர்ந்த நான்கு மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய , இந்த வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து படகு, 8 டெட்டனேட்டர்கள், மருந்து நிரப்பப்பட்ட 6 குழாய்கள், 2 ஜெலட்டின் குச்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்