இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 19 மீனவர்கள் தமிழகத்தை சென்றடைந்தனர்

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 19 மீனவர்கள் தமிழகத்தை சென்றடைந்தனர்

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 19 மீனவர்கள் தமிழகத்தை சென்றடைந்தனர்

எழுத்தாளர் Staff Writer

06 May, 2022 | 10:43 pm

Colombo (News 1st) Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையான 19 இந்திய மீனவர்கள் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டபோது, கடந்த மார்ச்
மாதம்19 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களை, இந்திய தூதரக அதிகாரிகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை சென்றடைந்த 19 மீனவர்களையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று மீனவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்