இங்கிலாந்தில் 13 ஆண்டுகள் காணாத வட்டி விகித உயர்வு

இங்கிலாந்தில் 13 ஆண்டுகள் காணாத வட்டி விகித உயர்வு

இங்கிலாந்தில் 13 ஆண்டுகள் காணாத வட்டி விகித உயர்வு

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2022 | 6:01 pm

Colombo (News 1st) இங்கிலாந்து வங்கி (BOE) உயர்ந்து வரும் பணவீக்கத்தை சமாளிக்கும் முயற்சியில், 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

மில்லியன் கணக்கான பிரித்தானிய குடும்பங்கள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளுடன் போராடும் நேரத்தில், BOE-இன் கொள்கை வகுப்பாளர்கள் டிசம்பரில் இருந்து நான்காவது தொடர்ச்சியான கட்டண உயர்விற்கு வாக்களித்தனர்.

வங்கியின் நாணயக்கொள்கைக் குழு, 25-அடிப்படை புள்ளிகளை பெரும்பான்மையாக 6-3 ஆக அதிகரிக்க ஒப்புதல் அளித்ததுடன், அடிப்படை வட்டி விகிதத்தை 1% வரை உயர்த்தியது.

எனினும், சிறியளவிலான உறுப்பினர்கள் வட்டி விகிதங்களை 0.5 சதவீத புள்ளிகளால் 1.25% ஆக அதிகரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள பல மத்திய வங்கிகளைப் போலவே, உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள போர் காரணமாக அதிகரித்துள்ள பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை வழிநடத்தும் செயற்பாடுகளை BOE முன்னெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கொரோனாவால் சீனா முடக்கப்பட்டமை உள்ளிட்ட காரணங்களின் விளைவாக இங்கிலாந்தின் பணவீக்கம் இந்த ஆண்டு தோராயமாக 10% உயரும் என்று வங்கி எதிர்பார்க்கிறது.

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை ஆழமாக்கி, பலரின் வருமானத்தை விட விலைகள் வேகமாக உயரக்கூடும் என்றும் வங்கி எச்சரித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்