கப்ரால் வௌிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

அஜித் நிவாட் கப்ரால் வௌிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

by Staff Writer 05-05-2022 | 6:26 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வௌிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பயணத்தடையை நீடித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல இன்று உத்தரவிட்டார். முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த நீதவான்,  மன்றில் ஆஜராகுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளார். இம்மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அஜித் நிவாட் கப்ராலுக்கு இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த தினத்தில் அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், இம்மாதம் 23 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட காலப்பகுதியில் அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்