by Bella Dalima 05-05-2022 | 4:07 PM
Colombo (News 1st) விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க மத்திய வங்கி அதிகளவான வட்டி வீதத்தை அறிவித்துள்ளது.
அதற்கமைய, இரண்டு தசாப்தங்களின் பின்னர் அதிகளவான வட்டி வீதம் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பணவீக்கம் 40 வருடங்களின் பின்னர் அதிகரித்துள்ள நிலையில், மேலும் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மத்திய வங்கியும் வட்டி வீதத்தை அதிகரித்துள்ளதாக நேற்று அறிவித்திருந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் வட்டி வீதமும் ஒரு தசாப்தத்தின் பின்னர் அதிகரித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இங்கிலாந்து வங்கிகளும் இன்று தனது வட்டி வீதத்தை அதிகரிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
கடந்த டிசம்பர் மாத்தில் இருந்து 4 தடவைகள் இங்கிலாந்தில் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.